ம.நல்லுாரில் 24 மணி நேர குடிநீர் சப்ளை…… – பரஞ்ஜோதி பிரச்சாரம்

63
Spread the love

திருச்சி மண்ணச்சநல்லுார் தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி இன்று பாச்சூர், தென்றல் நகர், கடுக்காதுரை, கோவத்தகுடி, குரங்குபேட்டை, வீராந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் எல்லாம் ஏராளமான பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.  பிரச்சாரத்தில் அவர் பேசும்போது….ஜெயலலிதாவிற்கு பின்னர் அதிமுக கட்சி இருக்காது என்று எதிரிகள் நினைத்தார்கள். ஆனால் ஒற்றுமையுடன் அதிமுக வெற்றி நடை போடுகிறது. உலகத்திலேயே தொண்டன் ஒருவன் முதலமைச்சராக இருப்பது அதிமுக கட்சியில்தான் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பதை

அறிவீர்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கட்சி வெற்றி பெற்று மூன்றாம் முறையாக ஆட்சிய அமைப்பது உறுதியாகி உள்ளது. ஆட்சி அமைந்த உடன் மண்ணச்சநல்லுார் பகுதி முழுவதும் 24 மணி நேரம் குடிநீர் கிடைத்திட பாடுபடுவேன். காவிரி-உப்பாறு திட்டம் மீண்டும் கொண்டு வர முயற்சி எடுப்பேன். கொடுந்துறையில் காவிரி உபரி நீரை சிட்டாம்பூர் ஏரிக்கு கொண்டு வந்து விவசாயிகளின் பாசன வசதியை மேம்படுத்துவேன் என்று அவர் பேசினார். 

LEAVE A REPLY