ம.நல்லுார் உப்பாறு கிளை வாய்க்கால் அமையும்….. – பரஞ்ஜோதி வாக்குறுதி

55
Spread the love

திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி  மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உள்பட்ட முசிறி கிழக்கு பகுதிகளான சித்தாம்பூர், குடித்தெரு, வடக்கு தெரு, அழகியபுரம், காவேரிபாளையம், அய்யன்குளத்துபட்டி, புதூர்பட்டி, கோமங்கலம், பூசாரிப்பட்டி, வில்லாப்பாறை, நெய்வேலி, கொல்லம்பட்டி, மேட்டுப்பட்டி, அழக்பெருமாள்பட்டி, தண்டலைபுதூர், சுக்காம்பட்டி, மூவானூர், வேங்கைமண்டலம், கீழகன்னுககுளம், மேலகன்னுக்குளம், திருத்தியமலை, டி.அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அவர் பேசும்போது……கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குழந்தைகள் பெண்கள் இளைஞர்கள் முதியவர்கள் என்று அனைத்து தரப்பினரும் ஏற்றம் கண்டு நிம்மதியாக உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை மேற்கொண்டு வருகிறார். அதிமுக வெற்றி

பெற்றவுடன் குடும்ப பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய்  ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வல் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார். மேலும் மாதம் 5 சிலிண்டர் இலவசம், அனைவருக்கும் விலையில்லா வாசிங்மெசின் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து உள்ளார். மேலும் பல ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். இந்த பகுதியில் பொதுமக்களின் கோரிக்கைபடி உப்பாறு கிளைவாய்க்கால் அமைத்து விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று அவர் பேசினார்.  பிரச்சாரத்தில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர புல்லட் ஜான், மாவட்ட துணைத்தலைவர் சின்னையன், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ், முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆமூர் ஜெயராமன், முசிறி ராஜமாணிக்கம், ஜெயம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

LEAVE A REPLY