அண்ணாவிற்கு அஞ்சலி…. – திருச்சி வடக்கு அதிமுக அழைப்பு

79
Spread the love

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில்….. தமிழ்நாடு முதலமைச்சர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிச்சாமி,  தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க, பேரறிஞர் அண்ணா அவர்களின் 52-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, வருகின்ற 3.2.2021(புதன்கிழமை) திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர் மற்றும் துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலுள்ள கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை மற்றும் அவரது உருவப்படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். 

LEAVE A REPLY