துறையூரை கைப்பற்றுவோம்.. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி பேச்சு

38
Spread the love

திருச்சி  அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி துறையூர் தொகுதி  நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது துறையூர் தொகுதியை பொறுத்த வரை தற்போது அதிமுக ஒரு சிறு சரிவை சந்துள்ளது. அதனை நாம் அனைவரும் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு, கட்சியில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்த்து, அதிமுகைவ மேலும் வளர்ச்சிப் பாதையில் எழுச்சியோடு வெற்றிநடை போடுவதற்கு வரக்கூடிய 2021 தேர்தலில், நாம் துறையூர் சட்டமன்ற தொகுதி என்றென்றும் அதிமுகவின கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க நாம்  அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா, துறையூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ இந்திராகாந்தி, துறையூர் ஒன்றிய செயலாளர் சேனை செல்வம், நகர செயலாளர் செக்கர் ஜெயராமன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பொன்.காமராஜ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் உப்பிலியபுரம் சென்ற பரஞ்ஜோதி ஒன்றிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

LEAVE A REPLY