பிஸ்கட் போனி ஆகல .. 10 ஆயிரம் பேர வீட்டுக்கு அனுப்ப பார்லே முடிவு

250
இந்திய பொருளாதார மந்த நிலையின் எதிரொலியாக பல்வேறு துறைகளும் கடுமையான இழப்பைச் சந்தித்து வருகின்றன. தற்போது நாட்டின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது என அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பிஸ்கட் விற்பனை குறைந்துள்ளதால் உற்பத்தியையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 8000 முதல் 10000 ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்புள்ளது என பார்லே நிறுவன அதிகாரி மயங்க் ஷா தெரிவித்துள்ளார்.  நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அரசு உடனே தலையிடவில்லை என்றால் நாங்கள் அவர்களை பணியிலிருந்து அகற்ற வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1929ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட பார்லே நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். நாடு முழுக்க அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக 10 உற்பத்தி மையங்களும் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் மேலும் 125 உற்பத்தி மையங்களும் உள்ளன என்பது குறிப்பிடதக்கது. 

LEAVE A REPLY