நாடாளுமன்றத்தை முடக்கிய ஜோதிமணி உட்பட 12 எம்பிக்கள் இடை நீக்கம்….

170
Spread the love

இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் எனும் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களின் போன்களை ஹேக் செய்து, போன் கால்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது. .  இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட விஐபி போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 2 போன்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மத்திய அரசின் தயவில்லாமல் இது நடைபெற வாய்ப்பில்லை என்று கூறி,  நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கடந்த 10 நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ இதுவரை செவி சாய்க்கவில்லை. இச்சூழலில் இன்று சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படவிருந்தன. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிறைவேற்ற விடாமல் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டீன் குரியகோஸ், ஹிபி ஈடன், ரவ்நீத் பிட்டு, குர்ஜீத் ஔஜிலா, டி.என்.ப்ரதாபன், வைத்திலிங்கம், சப்தகிரி சங்கர், ஏ.எம்.ஆரிஃப், தீபக் பைஜ் உள்ளிட்ட 12 எம்பிக்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர ஓம்பிர்லா உத்தரவிட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடியும் வரை இவர்களால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கு கொள்ள முடியாது.

LEAVE A REPLY