எடப்பாடி முதல்வர் ஆவாரா? கிளி ஜோசியம் பார்த்த கரூர் அமைச்சர்..

645
Spread the love

கரூர் அடுத்த வௌ்ளியணை ஊராட்சியில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். கிராம சூழலில் பொங்கல் விழா நடத்தப்பட்டதால் அங்கு கிராமங்களில் காணப்படும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் கிளிஜோசியமும் பார்க்கப்பட்டது. அப்போது அங்கு வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிளிஜோசியம் பார்த்தார். எடப்பாடி பழனிச்சாமி பேருக்கு ஒரு சீட்டெடு ஆத்தா என்று ஜோசியர் வெற்றி குரல் கொடுக்கவும், விறுவிறுவென்று வௌியே வந்த கிளி சீட்டுகளை சரித்து போட்டு சீட்டை தோ்தெடுத்து தந்தது. சீட்டை பிரித்தால்….சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் உள்ள குடும்ப படம் வந்தது. ஆங்…. குடும்ப படம் வந்துள்ளதால் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிதான் என்று சொல்ல, தேர்தல் ஆணையமே அறிவித்து விட்டதை போல அங்கிருந்தவர்கள் பெரும் மூச்சுடன் அமைச்சரை பார்த்தனர்.. . இதற்கெல்லாம் காரணமான கிளியோ, கூண்டுக்குள் இருந்து கம்பி வழியாக பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தது. 

LEAVE A REPLY