பாத்திரங்கள், தலைமுடியில் பரவுமா கொரோனா?….

255
Spread the love

கொரோனா வைரஸ் எங்கெல்லாம் பரவும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது. கொரோனா வைரஸானது பல நாட்கள் அல்லது பல மணி நேரங்கள் உயிருடன் வாழலாம். அதுவும் அது தங்கியிருக்கும் இடத்தை பொருத்து அமையும். உதாரணமாக திட பொருட்கள் மீது இருந்தால் 3 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிருடன் இருக்கும். 3 நாட்களுக்கு மேலும் உயிர் வாழும் தன்மை உடையது என்றும் தேசிய சுகாதார மையம் கூறியுள்ளது.

வைரஸ் பெரும்பாலும் தலைமுடிகளில் உயிர் வாழாது. அப்படியே பரவினாலும் நீண்ட நேரம் வாழ முடியாது. தலைமுடி மட்டுமல்ல ஸ்டீல் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்களின் மீது பரவினால் நீண்ட நேரம் உயிர் வாழ முடியாது. ஆனால் அது உயிருடன் இருக்கும் தருணத்தில் மற்றவர்களின் கைகளிலோ, உடலிலோ பரவும்.  எனவே இந்த சமயத்தில் முடியை விரித்து போடாமல் கொண்டை போட்டுக்கொள்ளுங்கள் அல்லது தினமும் தலைக்கு குளித்து விடுங்கள்.

வீட்டில் பாத்திரங்களை பயன்படுத்தினால் மீண்டும் ஒருமுறை கழுவி விடுங்கள், சுடு நீரில் அலசிக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனா பரவாது என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக சலூன் கடைக்குச் செல்வது பேராபத்து. எனவே கொரோனா பாதுகாப்பு சமயத்தில் சலூன் செல்லவே கூடாது என்று அறிவுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY