திருச்சி என்ஐடியின் 16வது பட்டமளிப்பு விழா இன்று திருச்சி பார்ன் ஹாலில் நடைபெற்றது. வீடியோகான்பிரன்சிங் மூலமாக நடைபெறும் முதல் பட்டமளிப்பு விழாவாகும். இன்றைய தினம் ந்நிறுவனத்தின் 53 வது பட்டதாரிகளின் தொகுதி சுமார் 1777 பட்டதாரிகள் தங்களது பட்டங்களைப் பெற்றனர்.
சிறப்பு விருந்தினராக பத்ம விபூஷன் அசிம் பிரேமஜி அவர்களை வரவேற்றார். இயக்குநர் மினி தாமஸ் 1777 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சாதனை எண்ணிக்கையாகும்.இதில் 9 பி.டெக் படிப்புகள் (803), பி. ஆர்க் (38), எம் ஆர்க் (17),எம்.டெக்(489), எம்.எஸ்.சி(67), எம்.சி.ஏ(85), எம்.பி.ஏ(72), எம்.எஸ்(33) பட்டதாரிகள். முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 98 ல் இருந்து இந்த ஆண்டு 173 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.