பட்டீஸ்வரம் கோவிலில் ஆஞ்சநேயர் சிலை திருட்டு.. பக்தர்கள் கவலை

106

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற தேனு புரீஸ்வரர் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு  கோவில் பூஜையை முடித்துக்கொண்டு கணேஷ் குருக்கள் வீட்டுக்கு புறப்பட்டார். கோவிலின் சின்ன கிணத்துமேடு அருகில் ராமர் திருத்தம் என்ற இடத்தில் பக்தர்கள் வாரம்தோறும் ஆஞ்சநேயர் சிலைக்கு விளக்கு போடுவது வழக்கம்.

இந்த சிலை பிரகாரம் பக்கத்தில் ஒரு அடி உயரத்தில் ஆஞ்சநேயர் கல் சிலை இருந்தது வழக்கம் போகும் போது கணேஷ் குருக்கள் பார்த்த போது ஆஞ்சநேயர் சிலையை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கூறினார் இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசில் நிர்வாகி புலவர் செல்வசேகரன் புகார் அளித்தார். அதன்பேரில் கும்பகோணம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மர்மநபர் ஆஞ்சநேயர் சிலையை பெயர்த்து எடுத்தது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.
பட்டீஸ்வரம் கோவிலில் ஆஞ்சநேயர் சிலை திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY