பயனுள்ள சமையல் டிப்ஸ்…

22
Spread the love

புளிப்பில்லாத மாங்காய்களை தோல் சீவி வேக வைத்து சர்க்கரைப்பாகுடன் அடுப்பில் வைத்து கிளறி ஜாமாகச் செய்து சாப்பிடலாம்.

👉 வடை தட்டும்போது உள்ளே ஒரு பன்னீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

👉 சம்மரில் இட்லிமாவு சீக்கிரமே புளிக்காமல் இருக்க, இட்லிக்கு உளுந்து அரைக்கும்போதே ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைத்தால் மாவு சீக்கிரம் புளிக்காது. இட்லியும் பூப்போல் இருக்கும்.

👉 பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டையும் சேர்த்து போட்டால் குழம்பில் கசப்பு மிகவும் குறையும்.

👉 மாங்காய் சீசனில் குழம்பு, கூட்டு செய்யும்போது புளிக்குப் பதிலாக மாங்காய் சேர்க்கலாம். இது புது மாதிரியான புளிப்பு சுவையை ருசிக்க வைக்கும்.

👉 கருணைக்கிழங்கை வேக வைக்கும் போது கொஞ்சம் புளி இலைகளையும் சேர்த்துக்கொண்டால் கிழங்கின் அரிக்கும் தன்மையை இது எடுத்துவிடும்.

👉 பிரெட் மற்றும் பாக்கிங் உணவு வகைகளில் அதிக அளவில் உப்பு மறைந்திருப்பதால் இதில் சமைக்கும்போது உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

👉 பாகற்காய், வாழைத் தண்டு, வாழைப்பூ இவற்றை முதலில் களைந்த அரிசித் தண்ணீரில் 15 நிமிடம் போட்டு வைக்கவும். பிறகு வேறு தண்ணீரில் அலசிவிட்டு சமைத்தால், கசப்பு குறையும்.

👉 ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது. மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY