சிதம்பரம் ஜாமின் மனு தாக்கல்!

75
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்க மறுத்தது. தீர்ப்பளித்தது. 
இதையடுத்து கடந்த 5 ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருப்பார். இந்நிலையில் இன்று சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். அதில் நான் சிபிஐ விசாரணைக்கு முறையாக  ஆஜராகியிருக்கிறேன். சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறேன். அப்படியிருக்க நான் ஆவணங்களை அழித்து விடுவேன் என்பது எப்படி சரியாகும்? எனக்கு நீதிமன்ற காவல் அளித்தது தவறு. எனவே எனக்கு ஜாமின் அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY