சிதம்பரத்திற்கு ஜெயிலா? அல்லது பெயிலா? … இன்று தெரியும்

163
New Delhi: Senior Congress leader and former finance minister P Chidambaram after he was produced in a CBI court in the INX media case, in New Delhi, Thursday, Aug 22, 2019. The court remanded Chidambaram for 4 days in CBI custody. (Ravi Choudhary/ PTI Photo)(PTI8_22_2019_000107B)
Spread the love

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ.,யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது. ஆனால் விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிதம்பரம் முறையாக பதிலளிக்கவில்லை என கூறிய சிபிஐ, சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் சிபிஐ தொடர்ந்து சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அமலாக்கத்துறை கைதை தவிர்க்க சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. அத்துடன் வயது முதிர்வு காரணமாக தனக்கு ஜாமின் வழங்கக் கோரி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனு டில்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. ஜாமின் வழங்க மறுத்த டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சிதம்பரம் தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆக, சிதம்பரத்தை சிறைக்கு அனுப்பும் சிபிஐ.,யின் மனு, காவலில் எடுக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு, அமலாக்கத்துறை கைதை தவிர்க்க முன்ஜாமின் கோரிய மனு ஆகியன சுப்ரீம் கோர்ட்டிலும், வழக்கமான ஜாமின் கோரிய மனு டில்லி ஐகோர்ட்டிலும் விசாரணைக்கு வர உள்ளன. எனவே சிதம்பரத்திற்கு பெயிலா? அல்லது ஜெயிலா? என்பது இன்று மாலைக்குள் தெரிந்து விடும். 

LEAVE A REPLY