ஹெல்த் விஜயபாஸ்கர் பிஏவின் உறவினர் நேற்றிரவு படுகொலை ஏன்?

376
Spread the love

புதுக்கோட்டை அடப்பன்வயல் 3 ம் வீதியை சேர்ந்தவர் ராஜரெத்தினம் மகன் வினோத் சக்கரவர்த்தி (27). வினோத்தின் தாய் மணிமேகலையின் சகோதரர் அன்பானந்தம் ஹெல்த் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொலிட்டிக்கல் பிஏயாக இருக்கிறார். ஆனால் இரு குடும்பத்தினருக்கும் பேச்சுவார்த்தை இல்லை.

நேற்று இரவு 8 மணியளவில் வினோத் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் கழுத்து மற்றும் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். வெட்டுப்பட்ட வினோத் சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை டவுன்போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரவுடி மண்டகாச்சி என்கிற கார்த்திகேயன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பழிக்குபழியாக கொலையாளிகளான தங்கராஜ் மற்றும் பீர் முகமது ஆகியோரின் நண்பரான வினோத் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY