பெரம்பலூரில் இரவோடு இரவாக ‘வேலையை’ முடித்தது அதிமுக

365
Spread the love

பெரம்பலூர் லோக்சபா தொகுதி திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்கட்சியின் நிறுவனத்தலைவர் பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் பணிகள் மற்றும் பிரச்சாரத்தை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடன் பாரிவேந்தர் மிக வேகமாக நடத்தி வந்தார். எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவபதி மற்றும் அமமுக வேட்பாளர் ராஜசேகர் ஆகியோர் பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. ஆனால் உளவுத்துறையின் அறிக்கையின் படி பெரம்பலூர் மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்பட்டதால் முதல்வர் எடப்பாடி நிர்வாகிகளை கூப்பிட்டு ஒழுங்காக வேலை செய்யுங்கள் என கூறியிருந்தார். அவர் பிரச்சாரத்திற்காக வந்து சென்ற பிறகு வரவேண்டியவை எல்லாம் வந்து விட்டதாக அதிமுக நிர்வாகிகள் கூறி வந்தனர். இதனிடையே நேற்று இரவு துவங்கி நள்ளிரவிற்குள் பெரம்பலூர் தொகுதியில் கொடுக்க வேண்டியதை அதிமுக தரப்பு கொடுத்து விட்டதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. 

LEAVE A REPLY