மாட்டுவண்டி ஓட்டிவந்த செந்தில்பாலாஜி… கரூரில் பரபரப்பு

239
Spread the love

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை கடுமையாக உயர்த்திய பா.ஜ.க, அதிமுக அரசுகளை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்டம் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக விவசாய அணிச் செயலாளர் ம.சின்னசாமி, மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், கழக சட்டத்துறை இணைச் செயலாளர் N.மணிராஜ், மாநில நெசவாளர் அணிச் செயலாளர் பரணி K.மணி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் V.பல்லவிராஜா, கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் கரூர் முரளி, தலைமை கழக செயற்குழு உறுப்பினர்கள் சுப.ராஜகோபால், காலனி செந்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் VKD.ராஜ்கண்ணு, Estate K. வேலுசாமி மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் MS.கருணாநிதி, மகேஸ்வரி சுப்ரமணியன், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY