3 நாளில் 88 பைசா குறைந்தது பெட்ரோல்

188
Spread the love

பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது நாளாக இன்றும் குறைந்தது.

கடந்த சில மாதங்களாக ஏறுமுகமாக இருந்ததால், மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல்-டீசல் விலையைக் குறைத்தன. இருந்தபோதிலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலை குறைந்து காணப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 41 காசுகள் குறைந்து 85 ரூபாய் 22 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 13 காசுகள் குறைந்து 79 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனையாகிறது. 3நாளில் பெட்ரோல் 88 பைசாவும், டீசல் 35 பைசாவும் குறைந்துள்ளது.

LEAVE A REPLY