புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி, பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியதில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோர் அடங்குவர்.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் பங்க்குகளில் சேவை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் வகையில், 15 நிமிடம் சேவை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.