Spread the love

பிரண்டை அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி, எலும்பு முறிவு போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணம் தரும். பிரண்டை துவையல் செரிமான பிரச்னைக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். இந்த துவையல் உடல் சுறுசுறுப்பை, நினைவாற்றலை பெருக்கும். மூளை நரம்புகளை பலப்படுத்துவதுடன், எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்தி, வாயு பிடிப்பைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெற்று, வனப்பும் பெறும். மூல நோய்க்கும் சிறந்த தீர்வு கிடைக்கும். பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் பிரச்னைக்கு தீர்வு தரும்.
பிரண்டை தண்டின் தோல், நாரை அகற்றி சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைத்து, தேங்காய், உளுந்து சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
சிறிதளவு பிரண்டை உப்புடன் 2 -3 கிராமை பாலில் சேர்த்துச் சாப்பிட 2 மாதத்தில் உடல் பருமன் குறையும்.
2 கிராம் பிரண்டை உப்புடன் ஜாதிக்காய்த் தூள் 5 கிராம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஆண்மைக் கோளாறு பிரச்னை தீரும். வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு 2 கிராம் வெண்ணெயுடன் இந்த உப்பை கலந்து இரண்டு தடவை சாப்பிட 3 நாளில் குணமாகும்.

LEAVE A REPLY