பிரதமர் ஆசை..? பிகேவுடன் சரத்பவார் 3 மணி நேர ஆலோசனை..

119
Spread the love

அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து அந்தக் கட்சிகளை வெற்றி பெறச் செய்யும் பணியினை பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவம் மேற்கொண்டு வருகிறது.. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் திமுக மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆகியவற்றின் வெற்றிக்காக ஐபேக் நிறுவனம் பணியாற்றியது.. இந்த நிலையில் தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவாரை மும்பையில் சந்தித்து 3 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த சந்திப்பு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது… பிரதமர் பதவி மீது சரத்பவாருக்கு எப்போதும் ஒரு கண்.. தன்னை பிரதமராக்க வில்லை என்கிற கோபத்தில் தான் காங்கிரசில் இருந்து வெளியேறியவர் அவர். இந்த நிலையில் பிகேவுடனான இந்த சந்திப்பு பல காங்கிரஸ் தலைவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. குறிப்பாக காங்கிரஸ் இல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்க சரத்பவார் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.. இது தொடர்பாக  தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரட்டி பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக நவாப் மாலிக் தெரிவித்தார். 

LEAVE A REPLY