அக் 2க்கு பிறகு ரயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

149
Spread the love

அக்டோபர் 2ஆம் தேதி முதல், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த ரயில்வே தடை செய்துள்ளது. விதிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சமாக, அனைத்து ரயில்களிலும் தூக்கி எறியப்படும் காலி தண்ணீர் பாட்டில்களை பேண்ட்ரி ஊழியர்கள் சேகரித்து, பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த ஐஆர்சிடிசி அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உபயோகத்தை கைவிட வலியுறுத்த வேண்டும். ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை சிதைக்கும் இயந்திரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY