துப்பாக்கி காயத்துக்கு திருடிய பிளாஸ்டரா?…ராகுல் கேள்வி!

112
Spread the love

ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை மற்றும் உபரி இருப்புத் தொகையை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான உயர்மட்டக்குழு, ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்திருந்தது. 

இதையடுத்து உபரி நிதியில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடியை வழங்க  ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.  இது குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது;  பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும், அவர்கள் உருவாக்கிய பொருளாதார பேரழிவை எப்படி சரிசெய்வது என்பது தெரியாமல் திணறி வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடி பொருளாதார பேரழிவுக்கு பயன்படுத்துவது பயனற்றது. இது மருந்தகத்தில் பிளாஸ்டரை திருடி துப்பாக்கி குண்டு காயத்திற்கு ஒட்டுவது போன்றதாகும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY