திருச்சி கோட்டத்தில் ரெயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை குறைக்கப்பட்டது…..

241
Spread the love

திருச்சியில் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக பிளாட்பார்ம் டிக்கெட் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஒரு புறம் கொரோனா என்று காரணம் கூறப்பட்டாலும் இந்த பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா தளர்வு காரணமாக தற்போது பிளாட்பார்ம் டிக்கெட் விலை 50 ருபாயில் இருந்து 10 ரூபாயாக குறைக்கப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி ரெயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் நாளை முதல் 10 ரூபாய்க்கு வழங்கப்படும். . 

LEAVE A REPLY