பள்ளியில் விபரீதம்.. ஒலிம்பிக் டார்ச் சரிந்து பிளஸ் 2 மாணவர் பரிதாப பலி

243
Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் ராமகிருஷ்ணா ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கூலி தொழிலாளி முருகன் என்பவரது மகன் விக்னேஷ் இந்த பள்ளியில் பிளஸ்-2 கம்ப்யூட்டர் பிரிவில் படித்து வந்தார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட விக்னேஷ் கடந்த 30 ஆம் தேதி பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியபடி வலம் வரும் நிகழ்வில் பங்கேற்றார்.

மற்றொரு மாணவரின் கையில் மாற்றும்போது ஒலிம்பிக் ஜோதி சரிந்து விக்னேஷ் மீது விழுந்தது. இதில் அவரது உடையில் பற்றிய தீ உடல் முழுவதும் பரவியது. உடல் கருகிய விக்னேஷ் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர்  மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விக்னேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY