பிளஸ்-2 திருத்தும் பணி 27ம் தேதி துவக்கம்.. அறைக்கு 8 பேர் தான்

62
Spread the love

பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களை திருத்தும்பணி வருகிற 27-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளதாக கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் விடைத்தாள் திருத்தும்பணிகள் நடைபெற உள்ளது. ஒரு அறைக்கு தலைமை தேர்வாளர் உள்பட மொத்தம் 8 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முக கவசம் அணிந்து மட்டுமே ஆசிரியர்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை அனுப்பியுள்ள உத்தரவில், ‘விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ள முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்கு வர வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த ஆசிரியருக்கும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படமாட்டாது என்றும், அனைவரும் கட்டாயம் பணியாற்றிட வேண்டும் என்றும் கல்வித்துறை திட்டவட்டமாக கூறி இருக்கிறது.

LEAVE A REPLY