போலீசார்கள் அனைவருக்கும் ரூ.5ஆயிரம் ஊக்கத் தொகை… முதல்வர் மு.க.ஸ்டாலின்

110
Spread the love

கொரோனா நெருக்கடி காலகட்டத்திலும் முன்களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவலர்கள் அனைவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்… உலகில் மட்டுமல்லாமல் இந்தியா, தமிழகம் என பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையில் போலீசார்கள் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றி வருகின்றனர்.corona-infection-rs-5-000-incentive-for-police-chief-minister-s-announcementஅவர்களது இன்றியமையாத பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் காவல்துறையை சேர்ந்த இரண்டாம் நிலை காவலர்கள் முதல் ஆய்வாளர் வரையிலான அனைத்து காவலர்களுக்கு 5 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை அளிக்க முதல்வர் உதவிட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் ஸ்டாலின் அவர்களும் தனது டிவிட்டரில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

LEAVE A REPLY