பஸ் டிக்கெட் ஓகே.. ஆர்டர்லி கேன்சல் எப்போ?… குமுறும் போலீசார்….

213
Spread the love

போலீசார் சொந்த காரணங்களுக்காக பஸ்கரில் செல்லும் போது, கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும் ஓசி பயணம் கூடாது டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு வரவேற்பு பெற்றுள்ள நிலையில் ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக இருக்கும் போலீசாரை திரும்ப பெற்று, போலீசில் உள்ள ஆட்கள் பற்றாக்குறையை எப்போது நிரப்புவார்கள் என சமூக வலைதளங்களில் போலீசார் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.. எஸ். பிக்கள் ஆரம்பித்து டி.ஜி.பி.,க்கள் வரை  அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக, ஆண், பெண் போலீசாரும் வேலை பார்த்து வருகின்றனர். ஆண்டு ஆண்டுகாலமாக நடந்து வரும் இந்த முறையில் ஆர்டர்லிகள் என்பவர்கள் அறிவிக்கப்படாத வேலைக்காரர்கள் தான். கிட்டத்தட்ட அனைத்து பணிகளையும் அவர்கள் செய்து வருகின்றனர். அதிகாரிகளின் உறவினர்களை வெளியில் அழைத்து செல்வது முதல் பிள்ளைகளை பள்ளி, கல்லுாரிக்கு அழைத்துச் செல்லுதல், சமையல் உள்ளிட்ட வேலைகளை, ஆண் மற்றும் பெண் போலீசார் செய்து வருகின்றனர்.  எனவே இந்த ஆர்டர்லி முறையை ஒழிக்க டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆர்டர்லி முறையை பெரும்பாலான போலீசார் எதிர்த்தாலும் வாகன வசதி முதல் உணவுப்படி, போனஸ் உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் சரியான நேரத்தில் கிடைக்கும்,  அதிகாரிகளின் தொந்தரவு இருக்காது என சில காவலர்களும் ஆர்டர்லிகளாக இருப்பதையே விரும்புவது வேறு கதை..

 

 

LEAVE A REPLY