தமிழக போலீசில் 4 பேருக்கு ஏடிஜிபி, 8 பேருக்கு ஐஜி பதவி உயர்வு

728
Spread the love

ஐஜிக்களாக உள்ள 4 பேருக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் மதுரை போலீஸ் கமிஷனராக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம், மத்திய அரசுப் பணியில் உள்ள சந்தீப் மிட்டல், தெலங்கானா மாநிலத்துக்கு அயல்பணிக்காக சென்றுள்ள பாலநாகதேவி, காவலர் நலன் பிரிவு ஐஜி சேஷசாய் ஆகிய 4 பேருக்கும் ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைவில் புதிய பணியிடங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தஞ்சை டிஐஜி லோகநாதன், வடசென்னை இணை கமிஷனர் கபில்குமார் சரத்கர், உள்நாட்டு உளவுத்துறை டிஐஜி கண்ணன், விழுப்புரம் டிஐஜி சந்தோஷ்குமார், காஞ்சிபுரம் டிஐஜி தேன்மொழி, கோவை டிஐஜி கார்த்திகேயன், திண்டுக்கல் டிஐஜி ஜோஷி நிர்மல் குமார், கடலோர காவல்படை டிஐஜி பவானீஸ்வரி ஆகிய 8 பேருக்கு ஐஜிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது எஸ்பிக்களாக உள்ள சரவணன்(கடலூர்), சேவியர் தன்ராஜ்(மத்திய குடிமைப் பணி), பிரவேஷ்குமார், அனில்குமார் கிரி, பிரபாகரன், கயல்விழி, சின்னச்சாமி ஆகிய 7 போலீஸ் அதிகாரிகளுக்கு சீனியர் எஸ்பி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைவில் டிஐஜி பதவி உயர்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

LEAVE A REPLY