போலீஸ் அதிகாரிகளுக்கு ராசியில்லாத ‘தூத்துக்குடி’

148
Spread the love

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற ஆர்பாட்டத்தில்  13 பேர் இறந்தனர். இதன் எதிரொலியாக தென்மண்டல ஐ.ஜி.,யாக இருந்தவர் சைலேஷ்குமார் யாதவ் ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டார். துாத்துக்குடி எஸ்.பி., மகேந்திரனும், கலெக்டர் வெங்கடேஷூம் இடமாற்றப்பட்டனர்.
இதன் பிறகு எஸ்.பி.,யாக முரளிதம்பா நியமிக்கப்பட்டார்.

சில மாதங்களிலேயே அவரும் இடமாற்றப்பட்டு மதுரை போக்குவரத்து துணைகமிஷனராக இருந்த அருண்பாலகோபாலன் நியமிக்கப்பட்டார். சில மாதங்களாகவே ஜாதி கொலைகள் தொடர்வதாக புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில் தான் சாத்தான்குளத்தில்  தந்தை, மகன் இறந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இதன் எதிரொலியாக எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். தற்போது புதிய எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயகுமாரும் குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்குள்ளாகி சர்ச்சையில் சிக்கியவர்.

LEAVE A REPLY