திருச்சியில் வாக்கு பதிவு எந்திரங்கள் இருக்கும் பாதுகாப்பு அறை திறப்பு…. ஏன்…?

26
Spread the love

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்கு பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கென பிரேத்யேக பாதுகாப்பு வசதி கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு அதில் வைக்கப்பட்டு உள்ளது.  இந்த வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு நேரடி பார்வையில் திறக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில்…. திருச்சி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள  870 கண்ட்ரோல் யூனிட் , 1090 விவிபேட் மெஷின்கள் உத்திரபிரதேசத்திற்கு அனுப்பி வைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து திறக்கப்பட்டதாக தொிவிக்கப்பட்டு உள்ளது. 

LEAVE A REPLY