இ பாஸ் இல்லாமல் ரயில்வே பணிக்கு திருச்சிக்கு 300 பேர் வந்தது எப்படி?

352
Spread the love

திருச்சி பொன்மலை பணிமனையில் வடநாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு பணியில் சேருவதற்கான சான்றிதழ் ஆய்வு இன்று நடைபெற்றது. இதனை கேள்வியுற்று அப்பகுதியில் திரண்ட தமிழகத்தை சேர்ந்த ரயில்வே அப்ரென்டிஸ் முன்னாள் மாணவர்கள் பொன்மலை பணிமனை வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஊரடங்கு அமுலில் இருக்கிறது என்று தொிந்திருந்தும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என்று அறிவித்ததன் மர்மம் என்ன? ரயில் ஓடவில்லை, பேருந்து இயங்கவில்லை 300 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தது எப்படி? இவர்களுக்கு இ-பாஸ் கொடுத்தது யாா்? என சரமாரி கேள்விகளை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

LEAVE A REPLY