நாராயணசாமி மீது ஊழல் புகார் கூறிய காங்., எம்எல்ஏ சஸ்பெண்ட்

97

புதுவை பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளார். முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்வதாகவும், மிக மோசமான ஆட்சி புதுவையில் நடக்கிறது என்றும் தனவேலு எம்.எல்.ஏ. விமர்சித்திருந்தார். மேலும் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார். புதுவை கவர்னர் கிரண்பேடியை நேரில் சந்தித்தும் காங்கிரஸ் அரசு மீது ஊழல் புகார் அளித்தார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து புதுவை திரும்பிய மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் இன்று  தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தனவேலு எம்.எல்.ஏ.வை அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் சஸ்பெண்டு செய்வதாக அறிவித்தார்.

 

LEAVE A REPLY