திமுக வெற்றி பெறாவிட்டால் தற்கொலை… ஜெகத் அதிரடி பேச்சு..

187
Spread the love

பாண்டிச்சேரியில் நடந்த திமுக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எம்பி ஜெகத்ரட்சகன் பேசியதாவது.. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கிக் கொடுத்தவர். அவரது வழியில் தலைவர் தளபதி அவர்கள் என்னை, புதுச்சேரிக்கு சென்று வாருங்கள் என வழியனுப்பி வைத்துள்ளார். நான் புதுச்சேரிக்கு தலைவரின் தூதுவராக வந்துள்ளேன். இந்த எழுச்சி ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சியாக இருக்கிறது. இந்த எழுச்சியை தலைவரிடம் தெரிவிப்பேன். நான் இந்த ஊர்க்காரன். இப்போது இந்த ஊரின் நிலையைப் பார்த்தால் என் வயிறு எரிகிறது. இங்கே எத்தனை ஆலைகள் மூடிக் கிடக்கிறது? இதனால் எத்தனை குடும்பங்கள் வேலையில்லாமல் வாடுகின்றனர்? இவர்கள் என்ன திட்டம் வைத்துள்ளார்கள்? எனது கனவு புதுச்சேரி மாநில மக்கள் நன்றாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் முதலீடு செய்ய இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பல பேர் காத்திருக்கிறார்கள். புதுச்சேரியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்காக, அந்த முதலீடு செய்யும் முதலாளிகளின் காலில் விழக் கூட தயங்க மாட்டேன். இதில் என்ன மரியாதைக் குறைவு இருக்கிறது.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை… உங்களில் ஒருவன். திமுக தலைமையிலான கூட்டணியே இங்கே வெல்லும். திமுக தலைமையிலான கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் என்பதை அங்கே இருக்கும் தலைவர் முடிவு செய்வார். தூய்மையான ஒரு ஆட்சியை, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் ஆட்சியை நாம் புதுச்சேரி மக்களுக்குக் கொடுப்போம். உங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். முப்பது இடங்களிலும் நாம் வெற்றிபெற வேண்டும். இல்லையேல் இதே மேடையில் தற்கொலை செய்துகொள்வேன் என ஜெகத்ரட்சகன் பேசினார்.. 

LEAVE A REPLY