பொங்கல் வைக்க நல்ல நேரம் இது தான்…

355

நாளை ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகை நாளாகும். இது இந்திரனுக்காக கொண்டாடப்படும் பண்டிகை, வீட்டில் உள்ள பழைய பொருட்களை வெளியேற்றிவிட்டு புதிய பொருட்களை வாங்கி வைப்பார்கள். புதிய பொருட்கள் வைத்து பூஜை செய்ய நல்ல நேரம் பகல் 12 மணி பிற்பகல் 2 மணிவரைக்கும். நாளை மறுநாள்  ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். மழை பெய்ய காரணமான இந்திரன், பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளரக்காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கவே பொங்கல் பண்டிகை பொண்டாடப்படுகிறது.

 

LEAVE A REPLY