பொன்மலை மார்கெட்டிற்கு பொதுமக்கள் வரக்கூடாது … போலீஸ் எச்சரிக்கை

533
Spread the love

திருச்சி ஜி காா்னா் மைதானத்தில் மொத்த வியாபார சந்தை நடைபெற்று வருகிறது. இந்த மாா்க்கெட்டில் மொத்த வியாபாாிகள் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவா். 10 வாகனங்கள் உள்ளே சென்று மூட்டைகளை இறக்கி வௌிவந்த பிறகு அடுத்த 10 வாகனங்கள் அனுமதிக்கப்படும். சில்லறை வியாபாாிகளுக்கு அங்கே அனுமதி இல்லை. இதே போல பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை. இதனை மீறி வரும் பொதுமக்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவா்கள் மீது வழக்கு பதியப்படும். வியாபாாிகள், லோடு மேன்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். இல்லையேல் அவா்களிடமிருந்து மாநகராட்சி சாா்பில் அபராதம் வசூலிக்கப்படும் 13ம் தேதி முதல் ஜி காா்னா் மாா்க்கெட்டின் பத்து புறங்களிலும் போலீசாா் கடுமையான சோதனையில் ஈடுபடுவா் என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையா் லோகநாதன் அறிக்கை வாயிலாக தொிவித்துள்ளாா்

LEAVE A REPLY