பொன்மலையில் தயாராகும் மேம்படுத்தப்பட்ட சரக்கு பெட்டிகள்..

94
Spread the love

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் சரக்கு ரயிலுக்கான கோச் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட கோச்சுகளில் கார்களை இலகுவாக ஏற்றி இறக்குவதற்கும், கார்களின் மேல் துாசி படியாமல் இருப்பதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மேம்படுத்தப்பட்ட கோச் ஒன்றினை தயார் செய்ய செலவு 8.37 லட்சம் ஆகும்.

கடந்த 2017 முதல் இதுவரை 140 சரக்கு கோச்சுகள் கார் ஏற்றிச்செல்வதற்கு உகந்ததாக மாற்றப்பட்டுஉள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 12 கோடியே 55 லட்சம் செலவில் 150 சரக்கு கோச்சுகள் பொன்மலை பணிமனையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இன்று 10 கோச்சுகள் வழியனுப்பு விழா நடைபெற்றது. பணிமனை முதன்மை மேலாளர் சியாமதர் ராம் கொடியசைத்து கோச்சுகளை வழியனுப்பி வைத்தார்.

LEAVE A REPLY