போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்….

154
Spread the love

ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று 3வது நாளாக தொமுச, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமிகாந்தன் முன்னிலையில் சென்னையில் இன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடந்தது. தொழிற்சங்கங்கள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராமல் இருந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.   இவர்களின் கோரிக்கைகள் அரசு சார்பில் ஏற்கப்பட்டது. இதனை தொடர்ந்து  போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு வௌியிட்டனர்.

LEAVE A REPLY