திருச்சி அருகே எரிக்கப்பட்ட தபால்கள்..செய்தது யார்?

209

திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகேயுள்ள தியாகேசர் ஆலை பள்ளி வளாகத்தில் கிடக்கும் குப்பையில் அதிக அளவிலான உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படாத தபால்கள் குவிந்து கிடந்தது. இதில் அதிகளவு தபால்கள் எரிக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பையில் கிடக்கும் தபால்களில் அதிகளவு புதுக்கோட்டை மாவட்டம் ஒளியமங்கலம், பொன்னமராவதி, திருமயம் ஆகிய பகுதிகளுக்கு உரிய நபர்களிடம் வழங்கவேண்டிய எல்.ஐ.சி, தபால்கள், தனியார் வங்கி தபால்கள், தனியார் இன்சூரன்ஸ் தபால்கள், பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய தபால் அட்டைகள், அரசுப்பணி சம்மந்தமான தபால்கள், வருமான வரித்துறை அலுவலக தபால்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொட்டப்பட்ட இந்த தபால்கள் 2018 மற்றும் 2019 ஆண்டுகளைச் சேர்ந்தவர்கள் என பொதுமக்கள் கூறுகின்றனர். குப்பையில் கொட்டிக்கிடக்கும் தபால்களை கண்ட சிலர் மணப்பாறை அஞ்சலக அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை உட்கோட்ட அஞ்சலக ஆய்வாளர் கணேசன் மற்றும் அதிகாரிகள் குப்பையில் கிடக்கும் தபால்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY