போதையில் தூங்கி போலீசில் சிக்கிய டூவீலர் திருடன்.. திருச்சியில் இன்று ருசிகரம்

814
Spread the love

திருச்சி பீமநகர் பழைய தபால் ஆபீஸ் ரோட்டில் எஸ்பிஜி  தொடக்கப்பள்ளி என்கிற தனியார் பள்ளி உள்ளது. இன்று காலை வழக்கம் போல் பள்ளியை சுத்தம் செய்ய பெண் பணியாளர் வந்தார். அப்போது பள்ளிக்குள் வாலிபர் ஓருவர் போதையில் தூங்கிக்கொண்டிருந்தார். இது தொடர்பாக கோர்ட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு தூங்கிக்கொண்டிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அந்த நபர் ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (30) என்பது தெரியவந்தது. டூவீலர் திருடனான பிரவீன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாத்தூர் செக்போஸ்ட்டில் டூவீலருடன்  சிக்கியுள்ளார். போலீசாரிடம் ஆர்சி புக் உள்ளிட்டவை கொடுத்து விட்டு டூவீலரை வாங்கிக்கொள்வதாக கூறி விட்டு டூவீலரை அங்கேயே விட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். மாத்தூர் போலீசார் விசாரணை நடத்தியது பிரவீன் வைத்திருந்தது திருட்டு வண்டி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தம்மை தேடுவார்கள் என பயந்து பீமநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு வந்து விட்டு இரவில் மட்டும் பள்ளியில் தங்கியிருந்த விபரம் தெரியவந்தது.. கோர்ட் போலீசார் பிரவீனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..  

LEAVE A REPLY