Spread the love

கொச்சியில் இருந்து திருச்சிக்கு இன்று காலை 7.40 மணிக்கு இண்டிகோ விமானம் வந்தது. அதில் 74 பயணிகள் வந்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் இறங்கியவுடன் சென்று விட்டனர். 20 பயணிகள் தாங்கள் கொண்டு வந்த பெட்டிகள் மற்றும் பார்சல்களுக்காக சம்மந்தப்பட்ட இடத்தில் காத்திருந்தனர். சுமார் 1 மணிநேரம் ஆகியும் லக்கேஜ்கள் வரவில்லை. இதையடுத்து அவர்கள் விமானநிலைய அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டனர். அப்போதுதான் கொச்சினிலிருந்து வந்த இண்டிகோ விமானத்தில் லக்கேஜ்கள் வரவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீபாவளியையொட்டி புது துணிகள் மற்றும் பரிசு பொருட்களை லக்கேஜாக  போட்டிருந்த பயணிகள் ஆத்திரமடைந்தனர். லக்கேஜ்களை கொச்சினில் இருந்து சென்னை கொண்டு அங்கிருந்து திருச்சிக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்வதாகவும் அநேகமாக இன்று இரவு அல்லது நாளை காலை லக்கேஜ்கள் கிடைத்து விடும் என்று அதிகாரிகள் கூறினர். பின்னர் அனைவரையும் சிஐஎஸ்எப் வீரர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

LEAVE A REPLY