பிரஸ்க்கு கொடுக்கும் பஸ் பாஸ்களில் ஏன் பாரபட்சம்?

350
Spread the love

தமிழக அரசு அந்தந்த மாவட்டத்தில் பணிபுரியும் செய்தியாளர்கள்,  போட்டோகிராபர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் இலவச பஸ் பாஸ் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வழங்கி வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் பஸ் பாஸில் ஒவ்வொரு கோட்டத்தில் ஒவ்வொரு மாதிரியான பயண அனுமதி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக  செய்திகள் சேகரிக்க செல்லும் நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்களுக்கு  பலவிதமான சிக்கல்கள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதே சமயம் கரூர் மாவட்ட செய்தியாளர்கள் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் முறையிட்டதன் அடிப்படையில்  அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் ( சென்னை பேருந்து நீங்கலாக) செல்லும் வகையில் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செய்தியாளர்களுக்கு இதுபோன்று வழங்க தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

LEAVE A REPLY