பிரியங்காவின் டில்லி பங்களா மாத வாடகை 37 ஆயிரம் தான் தெரியுமா?

76
Spread the love

சிறப்பு பாதுகாப்பு படையின் பரிந்துரைப்படி, 1997ல் காங்., தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவுக்கு, டில்லியில், லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கப்பட்டது. இந்த ‘டைப் 6’ வகை பங்களா, 2,765.18 சதுர மீட்டர் அளவுக்கு பரந்து விரிந்தது. கடந்த 2003ம் ஆண்டு ரூ.53,421 ஆக இருந்த இந்த பங்களாவின் வாடகையை, காங்., ஆட்சியின் போது  ரூ.8,888 ஆக குறைக்கப்பட்டது. மேலும் இந்த வாடகை ஆண்டுக்கு ரூ.1,700 மட்டும் அதிகரிக்கும் வகையிலும் சட்டவிதிகள் மாற்றப்பட்டன. அந்த வகையில் கடந்த 23 ஆண்டுகளாக  இந்த பங்களாவில் வசித்து வரும் பிரியங்கா கடந்த மாதம் வரை ரூ.37,400 மட்டுமே வாடகையாக செலுத்தியுள்ளார். சாதாரண நபராக இருந்து டில்லியில் உள்ள லோதி எஸ்டேட் பங்களாவில் வசித்து வந்தால்  இன்றைய சந்தை நிலவரப்படி மாதம் 20 லட்சம் வாடகை தர வேண்டியிருக்கும். தற்போது, இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை ஆக.,1க்குள், லோதி எஸ்டேட் பங்களாவை காலி செய்யுமாறும், வாடகை நிலுவை, ரூ.3.26 லட்சத்தை செலுத்துமாறும், மத்திய உள்துறை அமைச்சகம், பிரியங்காவுக்கு, நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து உ.பி., தலைநகர் லக்னோவில் உள்ள, அவரது பாட்டி இந்திராவின், தாய் மாமா மனைவியான ஷீலா கவுல் வசித்த வீட்டிக்கு குடியேற உள்ளார். பங்களாவுக்கு செலுத்த வேண்டிய ரூ.3.26 லட்சத்தை ஆன்லைன் வழியாக பிரியங்கா செலுத்தி விட்டதாக காங்., தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY