கும்பமேளாவில் குளித்து விட்டு அரசியல் பயணத்தை துவக்கும் பிரியங்கா…

425
Spread the love
பிரியங்கா,  பிப்ரவரியில் அரசியல் பயணத்தை முறைப்படி தொடங்கும் முன்பு  கும்பமேளாவில் புனித நீராடி தொடங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போதைய தேர்தல்களில் மித இந்துத்துவாவை கையில் எடுத்துள்ளது. ராகுல் காந்தி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்போது உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெறுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடி வருகிறார்கள். இந்நிலையில் பிரியங்கா,   பிப்ரவரி 4-ம் தேதி அமாவாசையன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பின்னர் முறைப்படி அரசியல் பயணத்தை தொடங்குகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்காவும் மேற்கொண்டுள்ளனர் எனவும், திரிவேணி சங்கமத்தில் நீராடிய பின்னர் இருவரும் பத்திரிக்கையாளரை சந்திக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிப்ரவரி 4-ம் தேதி நீராட முடியாமல் போனால், 10-ம் தேதி வசந்த பஞ்சமி வருகிறது. அன்று நீராட ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY