டூபாக்கூர்களுக்கு கடிவாளம்.. பிஆர்ஒக்கள் கூட்டத்தில் முடிவு..

1113
Spread the love

 தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள்(பிஆர்ஓ) பணி ஆய்வு கூட்டம் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. செயலர் மகேசன் காசிராஜன், இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செய்தித்துறையில் பணியாற்றும் பிஆர்ஒக்கள், உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது.. அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை, பொது மக்களுக்கு சிறப்பான முறையில் சேர்க்க வேண்டும். அரசின் திட்டங்கள் மற்றும் நலத் திட்ட உதவிகள் குறித்து, பொதுமக்கள் அறியும் வகையில், விளம்பர பணிகளை மேற்கொள்ள வேண்டும். பத்திரிகையாளர்கள் நலத் திட்ட உதவிகள் குறித்த விண்ணப்பங்களை தாமதப்படுத்தாமல், விரைவாக கிடைக்க செய்ய வேண்டும். அதற்கு, மாவட்ட கலெக்டர்கள் தங்கள் பரிந்துரையை விரைவாக அனுப்பி வைக்க, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.செய்தித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவகங்கள், மணிமண்டபங்கள், நினைவு துாண்கள் போன்றவற்றை மக்கள் அறிய, அவ்விடங்களுக்கு, 5 கிலோ மீட்டர் மற்றும் 1 கிலோ மீட்டர் தொலைவில் அறிவிப்பு பலகைகளை, முக்கிய சாலைகளில் அமைக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிஆர்ஓக்கள் சிறிய பத்திரிக்கைகள் என்கிற பெயரில் நாள் ஒன்றுக்கு தினமும் பலர் வந்து ஐ.டி கார்டு மற்றும் பஸ் பாஸ் கேட்டு தொல்லை செய்கின்றனர். இது குறித்து வழிகாட்டுதல் முறைகளை தயார் செய்து கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே டூபாக்கூர் பத்திரிக்கையாளர்களின் தொல்லைகளில் இருந்து தப்பிக்க முடியும் என கேட்டுக்கொண்டனர். இது குறித்து விரைவில் வழிகாட்டுதல் முறைகள் தயார் செய்து ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என செய்தித்துறை கூடுதல் இயக்குனர் அம்பலவாணன் கூறினார்.

LEAVE A REPLY