திருச்சி பேராசிரியர்கள் முற்றுகை போராட்டம்…..

238
Spread the love

திருச்சி தற்காலிக விரிவுரையார்கள் கூட்டமைப்பு சார்பில் கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) உதவி பேராசிரியர் பணிஇடத்திற்கான அறிவிப்பு கடந்த வருடம் வௌியிடப்பட்டது. இதன் காரணமாக கௌரவ விரிவுரையாளர்கள் , அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக விரிவுரையாளர்கள் , பல்கலைக் கழக கல்லூரியில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் என பல பேராசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தற்போது கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது . சமநீதி , சமவாய்ப்பு என்ற அடிப்படையில் விண்ணப்பித்த அனைவரின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பினை வழங்க  வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 

LEAVE A REPLY