பேராசிரியர் பணியிடம்.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

208
Spread the love

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான http;//trb.tn.nic.in./ என்ற இணைய தளத்தில் அறிவிக்கை கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர், காலியிடங்களின் எண்ணிக்கையை மாற்றியமைத்து திருத்தப்பட்ட புதிய அறிவிக்கையை அக்டோபர் 4 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

 இதன்படி, மொத்தம் 2331 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சம்பளம் விகித 10ன்படி, மாதம் ரூ. 57,000 முதல் ரூ.1,82,400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY