காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது!

108

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் சற்று முன் அளித்த பேட்டி; தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக மிதமான மழை நீடிக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை இருக்கும்.

குமரிக்கடலில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை இருக்கும். கடந்த அக்.1 முதல் இன்று வரை வடகிழக்கு பருவமழையின் இயல்பான அளவு 36 செ.மீ. ஆனால் இதுவரை 42 செமீ பெய்துள்ளது. இது 13% அதிகம்.

LEAVE A REPLY