புள்ளிங்கோ அட்டகாசத்தை போலீஸ் கவனிக்கணும்…..

194
Spread the love

புள்ளிங்கோ கெத்து காட்டுவது, சிட்டியில்தான் இருந்து வந்த நிலையில் இப்போது கிராமத்திலும் கெத்து காட்டி வீண் வம்பு இழுக்கும் முக்கால் பேண்ட்  புள்ளிங்கோஸ் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்துார் அரசு மேல்நிலை பள்ளியில் ஒரு புள்ளிங்கோவை முட்டி போட வைத்து அடித்து உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது. இரு புள்ளிங்கோஸ் தரப்பில் யார் கெத்து என்பதில் பிரச்சினை நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் ஜுனியர் புள்ளிங்கோ நக்கலாக சிரித்ததால் ஆத்திரம் அடைந்த, சீனியர் புள்ளிங்கோ  சரமாரியாக அடித்து உதைத்தது. கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டும் விடாமல் தாக்கும் புள்ளிங்கோவை சமாதானப்படுத்த வருவதாக மூன்றரை அடி புள்ளிங்கோ ஒன்று வருகிறது. பின்னர் மூன்றரை அடி புள்ளிங்கோவும் அடித்து துவைத்தது. கடைசியில் அந்த ஜுனியர் புள்ளிங்கோவை, சீனியர் புள்ளிங்கோஸ் விரட்டி விட்டது. இந்த வீடியோதான் வைரலாகி உள்ளது. இதற்கு பதில் தாக்குதல் நடத்த கிளம்பிய ஜுனியர்புள்ளிங்கோ, சாலையில் வழிமறித்து தாக்குதல் நடத்திய போதே ஆசிரியர் ஒருவர் வந்து தடுத்து நிறுத்தி புள்ளிங்கோஸ்களை விரட்டி விட்டார். இந்த வீடியோவும் இதற்கு முன்பாக வைரலாகி இருந்தது. ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு மாணவனுக்கு 32 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு செலவிடுகின்றது. சீருடை, பாடப்புத்தகம், காலணி உள்ளிட்ட 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. இத்தனை சலுகைகளையும் பெற்றுக் கொண்டு படிக்கின்ற வேலையை விட்டு கெத்து என்ற பெயரில் வீண் வம்பு செய்யும் சில ஊதாரி புள்ளிங்கோஸை காவல்துறை அள்ளி வந்துள்ளது. புள்ளிங்கோ பெற்றோர்களை

அழைத்து கடுமையாக எச்சரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு, சமூக நல விரும்பிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

LEAVE A REPLY