ரேப் இன் இந்தியா விமர்சனம்… ராகுலுக்கு சிக்கல்

188
Spread the love
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா என்ற இடத்தில், சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, மேக் இன் இந்தியா திட்டம் குறித்து பேசி வருவதாகவும் ஆனால், எங்கு நோக்கினும் ரேப் இன் இந்தியாவாக உள்ளது எனப் பேசியிருந்தார்.
அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக, ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பியது.
 
இந்நிலையில், ரேப் இன் இந்தியா என பேசியது குறித்து விளக்கம் கேட்டு, ராகுல் காந்திக்கு  தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

LEAVE A REPLY