ராகுல்காந்தி, எதிர்க்கட்சியினர் இன்று காஷ்மீர் பயணம்!

142
Spread the love

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு பதற்றம் நீடித்து வரும் நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு நாளை செல்லவுள்ளனர். அவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஸ்ரீநகர் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது

காஷ்மீருக்கான  சிறப்பு அந்தஸ்தை நீக்கி, காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது காஷ்மீரில் தற்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை முழுவதும் சீரடைந்த பின் படைக்குவிப்பு திரும்பப் பெறப்படும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் இன்று காஷ்மீருக்கு செல்கின்றனர். காஷ்மீர் மக்கள் மற்றும், வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களையும் சந்தித்து, ராகுல் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது. அவருடன் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா இந்திய கம்யூ., பொதுச்செயலாளர் டி.ராஜா, மற்றும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் 9 பேர் செல்கின்றனர்.
 

காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக குற்றம்சாட்டிய ராகுலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆளுநர் சத்தியபால் மாலிக், காஷ்மீர் நிலையை நேரில் வந்து பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று, ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. திமுக சார்பில் திருச்சி சிவா இதில் பங்கேற்கிறார்.

LEAVE A REPLY